அக்கரைப்பற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கி மருந்தினை விசிறும் நடவடிக்கை

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருவர் கொரோனா தொற்றாளர்களாக சுகாதாரத்துறையினரால் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் இன்று பாதுகாப்பு தரப்பினர் அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கி மருந்தினை விசிறும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இது இவ்வாறிருக்க வீதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் பொதுமக்களையும் பொலிசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். முறையான அனுமதியோடு மாத்திரம் பயணிக்கும் வாகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்குவதுடன் அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.