கமு/திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலையின் ‘முகப்பு வாயில்’ திறப்பு விழா மற்றும் ‘பாண்ட் வாத்திய குழு’ அங்குரார்ப்பண நிகழ்வுகள் கோலாகலமாக இன்று…..

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலையின் ‘முகப்பு வாயில்’ திறப்பு விழா மற்றும் ‘பாண்ட் வாத்திய குழு’ அங்குரார்ப்பண நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் திரு.த.இராசநாதன் அவர்களின் தலைமையில் இன்று (08.04.2022) வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் கோலாகலமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.யோ.ஜெயச்சந்திரன் (திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் விசேட அதிதிகளாக திரு.k.கங்காதரன் (ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர்), திரு.கீ.கமலமோகனதாஸன் (திருக்கோவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்), திரு.க.சத்தியமூர்த்தி (ஸ்தாபகர் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’) மற்றும் திரு.பியசிறி (கண்ணகிபுரம் இராணுவ முகாம் பொறுப்பதிகரி) என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் இந் நிகழ்வில் குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
இன்று காலை 08.30 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு பாண்ட் வாத்திய குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பாண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பூ மாலைகள் அணிவித்து அதிதிகள் கௌரவித்து வரவேற்கப்பட்டதுடன் பாடசாலையின் முகப்பு வாயில் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. மேலும் நிகழ்வின் அதிதிகள் உரை, மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது