ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு…

அக்கரைப்பற்று, பனங்காடு, ஆலையடிவேம்பு,கண்ணகி கிராமங்களை சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 1500ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்றைய தினம் லண்டனில் வாழும் பெயர் சொல்ல விரும்பாத சகோதரி அவர்களின் பங்களிப்பினால் திரு.சீனு அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் தம்பிலுவிலை சேர்ந்த பெற்றாரை இழந்த ஒரு சிறுமிக்கு கற்றல் நடவடிக்கைக்காக 5000ரூபா பணமும் வைப்பு செய்து கொடுக்கப்பட்டதும் கொடுக்கப்பட்டது.
கனடாயினை சேர்ந்த திரு. யோகநாதன் அவர்களின் மனிதாபிமான பணி செற்பாடுகளை திரு.சீனு அவர்கள் பலவருடங்களாக மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.