சைபர் தாக்குதலால் தரவுகளை திருடவில்லை – ஹக்கர்கள்

சைபர் தாக்குதலால் இணையதளங்களில் தரவுகளை திருடவில்லை என்றும் நீக்கவில்லை என்றும் ஹக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் இலங்கையில் google.lk இணையதளம் மீது இன்று (சனிக்கிழமை) காலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இணையங்கள் முடக்கப்பட்ட நிலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றுக்காக இணையங்கள் முடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை, இனவாத செயற்பாடுகள் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.