இலங்கை
லண்டனில் நிர்க்கதிக்குள்ளான 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்ப முடியாது லண்டனில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
278 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பியவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.