ஆலையடிவேம்பு
பங்களாதேசில் இலங்கை சார்பிர் பதக்கம் வென்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை தமிழ் மாணவன்…

பங்களாதேசில் இடம் பெற்ற தெற்காசிய காரத்தே போட்டியில் பாடசாலை மட்ட 21 வயதிற்கு உட்பட்ட கனிஸ்ட்ட பிரிவில் 67 kg நிறையில் இலங்கை சார்பில் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பில் இருந்து பங்குபற்றிய கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சோதிஸ்வரன் ரிஷோபன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.குறித்த மாணவன் ராம் கராத்தே சங்க மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேசில் இடம்பெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில்
இலங்கை சார்பாக கலந்துகொண்ட சோதிஸ்வரன் ரிஷோபன்
வெண்கல பதக்கம் வென்று எமது பிரதேசத்திற்கும் அவர் கல்வி பயிலும் பாடசாலை கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை ற்கும் RKO சங்கத்திற்கும் எமது இலங்கை திருநாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.