ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசங்களின் இன்றைய நிலை…….

-M.கிரிசாந்-
காலிமுகத்திடல் சம்பவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் ஏற்பட்டுவரும் அசம்பாவிதங்களினால் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாளை (12) காலை 07.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) டயர்கள் எரிக்கப்பட்டு மக்கள் ஒன்று திரள முயச்சித்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அரச நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டு இருப்பதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் அங்கங்கே உள்வீதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் நடமாட்டம் சிறிதளவில் காணப்படுவதினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளதுடன் தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை எச்சரிக்கை செய்ததுடன் வாகனங்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளையும் காணக்கூடியதாக உள்ளது.