ஆலையடிவேம்பு

செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் – ஆலையடிவேம்பில் டக்ளஸ் தேவானந்தா

வி.சுகிர்தகுமார்

  செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அம்பாரை மாவட்டத்திற்கான விஜயமொன்றை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்; அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் துரையப்பா நவரெட்ணராஜாவின் அழைப்பின் பேரில் மேற்கொண்ட அவர் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கும் (27) மாலை வருகை தந்தார்.

வருகை தந்த அமைச்சருக்கு மக்கள் சிறந்த வரவேற்பளித்தனர். அத்தோடு கட்சியின் முக்கியஸ்தர்களால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதேநேரம் அமைச்சரினால் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொண்ட யுவதி ஒருவ்ர் அமைச்சருக்கான நினைவுச்சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் கடந்த காலங்களில் பல அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளின்போது பல வானளாவிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அந்த வாக்குறுதிகளில் உண்மைத்தன்மையோ அவற்றை நிறைவேற்ற கூடிய விருப்பமோ அல்லது ஆற்றலோ அவர்களிடம் இருக்கவில்லை. அவை ஒன்றும் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.

ஆனால் எங்களிடம் எங்களிடம் மக்கள் தொடர்பான அக்கறை உள்ளது. அனுபவம் உள்ளது. ஆற்றல் உள்ளது. இருந்தாலும் எங்களிடம் இல்லாததொன்று உங்களிடம் உள்ளது. அதை உங்களுக்காக எங்களிடம் தருவீர்கள் என்றால் உங்களை நாம் பக்குவமாக பாதுகாத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்றார்.

அதற்கு ஜந்து பத்து வருடங்கள் செல்லும் என சொல்லப்போவதில்லை. ஆட்சியாளர்கள் ஏமாற்றிவிட்டனர் என்றும் சொல்லப்போவதில்லை. செய்வதைத்தான் சொல்வேன் சொல்வதைத்தான் செய்வேன் எனும் வரலாற்றை கொண்டவன் நான் என்றார்.

இங்கு உரையாற்றிய அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளர் துரையப்பா நவரெட்ணராஜா   இன்றைய இளைஞர்கள் சிலரது உணர்ச்சிவச பேச்சுக்களாலும் பொய் வார்த்தைகளாலும் எதிர்காலம் சிறக்குமென எண்ணி மாயைக்குள் சிக்கியுள்ளனர். ஒரு மாயை நமக்குள் ஆட்கொண்டு எதிர்காலத்தை எவ்வாறு சூனியமாக்குமோ அதையே  இந்த தேர்தல் நமக்கு சொல்லித்தரப்போகின்றது. இந்த நிலையில் இணக்கப்பாட்டு அரசியல் மூலமே தமிழ் சமூகத்தை நல்வழிப்படுத்த முடியும் என நிரூபித்தவர்  தோழர் டக்ளஸ் தேவானந்தா. ஆகவேதான் அவர் வழியில் செல்ல நாம் தேர்தலில் களமிறங்கியுள்ளோம். இந்நிலையில் நடைபெறப்போகும் தேர்தல் எமக்கான சக்தியை தரும் தேர்தலாக அமையப்போகின்றது. ஆகவேதான் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். மாற்றம் தானாக நிகழாது. அந்த மாற்றத்தை நாமாகவே மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker