உலகம்
செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பதற்றம்
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இதன்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர்.
பொலிஸார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனையடுத்து, பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தடியடியும் நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டு தாக்குதலையும் நடத்தினர்
இதற்கிடையில் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.