அதிக தொகைக்கு ஏலம் போனது பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் தொப்பி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரமான டொனால்டு பிராட்மேன் அவரது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிந்த தொப்பி ரூ.2.50 கோடிக்கு ஏலம் போனது.
உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான 2 ஆவது நினைவுச் சின்னம் என்ற பெயரை பிராட்மேனின் தொப்பி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னா் ஷேன் வாட்சனின் டெஸ்ட் கிரிக்கெட் தொப்பியே உலகிலேயே அதிக விலைக்கு (ரூ.5.61 கோடி) விற்பனையான சாதனையை படைத்துள்ளது.
தற்போது பிராட்மேனின் தொப்பியை ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தொழிலதிபரான பீட்டா் ஃப்ரீடுமேன் ஏலத்தில் எடுத்துள்ளாா். ஆஸ்திரேலியாவுக்காக 1928 முதல் 1948 வரை கிரிக்கெட் விளையாடிய பிராட்மேன், அந்த காலகட்டத்தில் 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடினாா். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவா் அறியப்படுகிறாா்.
பிராட்மேன் தொப்பியை ஆஸ்திரேலியா முழுவதுமாக காட்சிப் பொருளாகக் கொண்டு செல்லும் திட்டமுள்ளதாக அதை ஏலத்தில் எடுத்துள்ள பீட்டா் ஃப்ரீடுமேன் கூறினாா்.
தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்தத் தொப்பியானது 1928 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மூலம் சா்வதேச டெஸ்டில் பிராட்மேன் தடம் பதித்தபோது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னா் 1959 இல் பிராட்மேன் அந்தத் தொப்பியை தனது குடும்ப நண்பா் பீட்டா் டன்ஹாம் என்பவருக்கு பரிசாக வழங்கினாா்.
இந்நிலையில், நிதி மோசடி குற்றச்சாட்டில் பீட்டா் டன்ஹாமுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது பீட்டரின் கடன்களை அடைக்க பிராட்மேனின் தொப்பி உள்பட அவரிடம் உள்ள சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டன.