சீனாவைத் தாக்கிய லெகிமா சூறாவளி 33 பேர் பலி

சீனாவை தாக்கிய லெகிமா சூறாவளியில் சிக்கி குறைந்தது 22 பேர் பலியானதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தமது வீடுவாசல்களை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். சூறாவளியின் விளைவாக இடம்பெற்ற மண்சரிவின் காரணமாகவே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூறாவளியால் தாய்வானுக் கும் சீனாவின் ஷங்காய் நகருக்குமி டையிலுள்ள வென்லிங் பிராந்தியத் தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களிலும் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூறாவளி காரணமாக 1,000 க்கு மேற்பட்ட விமானசேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஷங்காய் டிஸ்னிலாண்ட்டும் மூடப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி தற்போது பலமிழந்து வருகின்ற போதும் அதனால் பாரிய வெ ள்ள அனர்த்தம் இடம்பெறும் அபாயம் தொடர்ந்து உள்ளதாக பிராந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூறாவளி அனர்த்தத்தையொட்டி ஷங்காயிலிருந்து 250,000 பேரும் ஸெஜி யாங் மாகாணத்திலிருந்து 800,000 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
அத்துடன் அந்தப் பிராந்தியத்திலுள்ள 2.7 மில்லியன் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கிய 9 ஆவது சூறாவளியாக விளங்கும் லெகிமா சூறாவளி கடந்த பல ஆண்டுகள் காலப் பகுதியில் தாக்கிய ஏனைய சூறாவளிகளுடன் ஒப்பிடுகையில் பலம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது.