இலங்கை
இந்த ஆண்டில் 1,966 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 35,702 பேர் கைது

இந்த வருடத்தின் நவம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்குதியில் மட்டும் 1,966.0764 கோடி ரூபா பெறுமதியான ஹேரோயின் போதைப்பொருடன் 35,702 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது 1,638.397 கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் போதைப் பொருளை கடத்தி வருவது மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மிகப் பெரும் புள்ளிகள் 24 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.