ஆலையடிவேம்பு
241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு…

241 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி விரிகேடியர் ஜனக விமலரட்ன மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி கேணல் சமிந்த அவர்களின் தலைமையிலும் 28.08.2020 இன்று 241 வது படைப்பிரிவின் மஹா கணபதி கோயிலில் கும்பாவிஷேக நிகழ்வு சிவ ஸ்ரீ கௌரி சங்கர் குருக்கள் அவர்களினால் வெகுவிமர்சையாக நடாத்தப்பட்டது.
ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர்கள் ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட ஆலய அறங்காவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.