இலங்கை

சிறுமியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – பெண்கள் அமைப்பு கருத்து

மலையக சிறுமியின் மரணம் தொடர்பான உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றை வலியுறுத்தி நாம் போராடுவோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – என்று வீட்டுப் பணிப்பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பான ட்ரொடெக்ட் .அமைப்பின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.

18.07.2021 அன்று அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த டயகம பகுதி சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பல தகவல்கள் வெளியாகினாலும், சட்டபூர்வமான அறிவிப்பு இன்னும் தெரியவரவில்லை. தரகர் ஒருவர் ஊடாகவே அச்சிறுமி சென்றுள்ளார். சிறாரை எவ்வாறு வேலைக்கு அமர்த்த முடியும்?  இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே, சிறுமியின் மரணம் தொடர்பில் எமக்கு உண்மை தெரியவரவேண்டும். எமக்கு நீதி அவசியம். எந்தவொரு தகவலும் மூடிமறைக்கப்படக்கூடாது. அதற்காக வீட்டுப்பணிபெண்களுக்காக குரல் கொடுக்கும் எமது சங்கம் போராடும். வீட்டுப்பணிப்பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மலையக பகுதியில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றோம். இதனால் பெண்கள் இன்று கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. பெண்களை வேலைக்க செல்லவேண்டாம் எனக்கூறவில்லை. ஆனால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.”  – என்றார் கருப்பையா மைதிலி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker