ஆலையடிவேம்பில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்: அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் விசேட வழிபாடு நிகழ்வு….

தஸ்திகாந்த்
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் சென்ற வருடத்தினை விடவும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன்; மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகமான மக்கள் இன்று அதிகாலை வேளையில் மருத்துநீர் வைக்கும் பாரம்பரிய நிகழ்வுகளில் கலந்து கொண்டும் பின்னர் நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஆலையடிவேம்பு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆலயத்தில் இன்றையதினம் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாட்டில் கலந்து கொண்டனர்.
இறைவழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பெரும்பாலான ஆலயங்களிலும் இன்றைய தினம் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.