மருதமுனைப் பிரதேசத்தை முற்றாக முடக்குவதில்லை ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென தீர்மானம்.

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, (01) தொடக்கம் ஒரு வார காலத்திற்கு பிரதேசத்தை முற்றாக முடக்குவதில்லை ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதென இன்று இடம்பெற்ற சுகாதாரத்துறையினருடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, நேற்றும் இன்றும் மருதமுனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். முடிவுககின் பிரகாரம் தொற்றாளர்கள் இணங்கானப்படாதபடியால் முற்றாக முடக்குவதில்லை என. இன்று கல்முனை மாநகர சபை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் முழுமையாக கிடைக்கப்பட்டதன் பின்னார் முடக்கம் சம்மந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மருதமுனை பிரதேசத்தில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணியுடன் முடிவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதுடன் இறுகமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.வாஜீத், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர், கல்முனை இராணுவ லெப்டினன்ட் குலசேகர, கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.உதயான்கே கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், உட்பட வைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.