புரெவி புயலால் யாழில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்


புரெவி புயலால் யாழ். மாவட்டத்தில் 142 படகுகளும் 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுககளுக்கு இவ்வாறு சேதம் ஏற்பட்டதாக நா.வர்ணகுலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என நா.வர்ணகுலசிங்கம் கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது புயல் காற்று காலத்திலும் தமது மீனவர்கள் கடலிற்கு செல்லவில்லை என்றும் தமக்கான நிவாரணம் பெற்றுத் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



