ஆலையடிவேம்பு
Trending
கண்ணகிகிராமம் 01, 02 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சித்திட்டம்…

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிகிராமம் 01, 02 கிராம சேவகர் பிரிவுகளுக்கான கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான தீர்மானங்களை மக்கள் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (22) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் கிராமிய சங்கங்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
கிராமிய மக்களால் கிராமத்திற்கான வரைபடம் முப்பரிமாண தோற்றத்தில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.