அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை ”சத்தியம்” அமைப்பின் அனுசரணையில் நிறுவப்பட்டு வருவதுடன்: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….

-கிரிசாந் மகாதேவன்-
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கான பெயர் பலகை நிறுவப்பட்டு பாடசாலையின் பௌதீக சூழல் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த பயனுள்ள செயற்பாடானது சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் தங்கேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் பெயர் பலகை நிறுவப்பட்டு அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“சத்தியம் “ (லண்டன்) வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச பல பாடசாலைக்கு பல்வேறுபட்ட பல உதவிகளை தொடர்சியாக செய்து வருவதுடன்.
குறித்த திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கு மேலும் பல பௌதீக அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளவேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும் குறித்த நடவடிக்கைக்கு தங்களால் இயன்ற பங்களிப்புக்களை சமூக அமைப்புக்கள் அல்லது நலன் விரும்பிகள் முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றார் பாடசாலையின் அதிபர்.
தற்போது நிறுவப்பட்டு வருகின்ற பெயர் பலகை விரைவில் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இடம்பெற உள்ளதாகவும் மேலும் இவ்வாறான உதவிகளை வழங்கி பாடசாலை வளர்ச்சியில் பங்காற்றியமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக “சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பிற்கு பாடசாலை அதிபர் தங்கேஸ்வரன் அவர்கள் நன்றிகளையும் தெரிவித்தார்.