ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து நாளை நடைபெற இருந்த இலவச கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்குமான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதி பாடசாலைகளுக்கு சனிக்கிழமை நடைபெற இருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணித பாட இலவச கல்வி கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கு ஆனது எதிர்வரும் 2021.01.30 சனிக்கிழமை மற்றும் 2021.01.31 ஞாயிற்றுக்கிழமைகளில் திகோ/ இராமகிருஷ்ணா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற இருந்தது.
எனினும் நாளை நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கானது இடைநிறுத்தப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்குமான கருத்தரங்கு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) திகோ/ இராமகிருஷ்ணா கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருகின்றனர்.