“சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்” ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் ….

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் டிசம்பர்-18 ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில். குறித்த சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினமாகிய இன்றைய தினம் (18/12/2023) காலை 10.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு மிக்கதாக இடம்பெற்றது.
நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு பிரிவு, ஆலையடிவேம்பு புலம்பெயர் தொழிலாளர் சம்மேளனம் மற்றும் SWORD அமைப்பின் ஏற்பாட்டிலும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அவர்களின் இணை அனுசரணையிலும் திறன்பட இடம்பெற்றது.
நிகழ்வுகளாக விழிப்புணர்வு வாசகங்கள் தாங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விழிப்புணர்வு மேடை நாடகம், அதிதிகள் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு புலம்பெயர் தொழிலாளர் சம்மேளனத்தின் நாவற்காடு, ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதிகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் அதிதிகளாக திருமதி.சில்வெஸ்ரர் பரிமளவாணி (AO-GN), திரு R.ஜெகதீஸ்வரன் (சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்), M.I.M.ரூபினா (சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்) என்பவர்கள் கலந்துகொண்டிருந்தனர் மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.க.தயாபரன் மற்றும் திருமதி.தேவதர்ஷினி என்பவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.