சர்வதேச புகைத்தல் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி…..

சர்வதேச புகைத்தல் தினம் மே31 அதாவது இன்று உலக நாடு பூராக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தலைமையில் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் ஓர் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
இவ் பேரணி ஆனது திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இருந்து ஆரம்பமாகி நீதிமன்ற வீதி ஊடாக திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்து அங்கு பாடசாலை மாணவர்களும் இப் பேரணிக்கு உள்வாங்கப்பட்டு பிரதான வீதியில் கவனியீர் பதாகைகள் ஏந்தியவாறு இவ் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களால் புகைத்தல் ஆண்மையை குறைக்கும்,புகைத்தல் இளமையை இழக்க செய்யும், மது போதை வீட்டுக்கும் தொல்லை நாட்டுக்கும் தொல்லை எனும் விழிப்புனர்வு பதாகைகள் ஏந்தியவாறு மாணர்வர்களால் இருந்தமை காணக்கூடியவாறு இருந்தது.
மேலும் சுகாதார பிரிவினரால் வியாபார நிலையங்கள் பேன்றவற்றிக்கு புகைத்தல் தடை சம்மதமான விளிப்புனர்வு ஸ்ரிக்கர்களை ஓட்டினர்.
இவ் நிகழ்வில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி MOH.P.மோகனகாந்தன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவிச்செயலாளர் க.சதீசேகரன் மற்றும் சுகாதார பிரிவினர், பாடசாலை, மாணவர்கள், பொதுமக்கள் ஆகிய பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜே.கே.யதுஷன்