இலங்கை

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் விரும்பவில்லை

சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறுபட்ட கூட்ட தொடர்களுக்கு பிறகு அதாவது கிளிநொச்சி, வவுனியா, கொழும்பு மீண்டும் கிளிநொச்சி இப்படி பல கூட்டங்களுக்கு பிறகு ஒரு பொதுவான அறிக்கை தயாரிப்பிற்கு எல்லோரும் ஒன்றுபட்டார்கள்.

இன்னும் குறிப்பிடுவதாக இருந்தால் அதாவது நாங்கள் மாத்திரம்தான் ஒரே ஒரு தமிழ்த் தேசிய வாதிகள் என்றும், மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் என்றும் சொல்லப்பட்டு வந்த, அதாவது நாங்கள் மாத்திரம் தான் இனப்படுகொலை என்பதை உலகமெங்கும் கொண்டுசென்றோம் மற்றவர்கள் வாய் துறக்கின்றார்கள் இல்லை என்று சொல்லி வந்தவர்கள் எல்லாம் அவர்கள் சொல்லிவந்த வரைபை நீங்கள் பார்த்தால் இன படுகொலை என்ற ஒரு வார்த்தை அதில் இல்லை.

அதற்கு பிற்பாடு எங்களது தரப்பில் இருந்து நான், சிவாஜிலிங்கம் போன்றோர் அது கொண்டுவரப்பட வேண்டும். அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் நடவடிக்கைக்கு விசாரணைக்கு அது கொண்டுபோகப்பட வேண்டுமாக இருந்தால் என்ன விசாரணையை குற்றவியல் நீதிமன்றம் செய்யப் போகின்றது தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய விடயம் என்ன யுத்தத்துக்கு எதிரான குற்றங்கள் ,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து, அதாவது யுத்தகாலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் ஒரு பிரிக்கேடியர் கொலை செய்துவிட்டார் என்றோ அல்லது ஒரு மேஜர் ஜெனரல் கட்டளையின் பிரகாரம் கொஞ்ச பேர் கொலை செய்யப்பட்டது என்று அவர்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தண்டனை கொடுக்கலாம்.

இதனான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்து போகுமா ஆனால் இலங்கையில் ஒரு இன அழிப்பு இடம்பெற்றது அந்த இன அழிப்புக்கான மூல காரனிகள் யார் அது விசாரிக்கப்பட்டால் தான் நிட்சயமாக இலங்கை தமிழ் மக்கள் இன்னுமொரு இன அழிப்பில் இருந்து பாதுகாக்கப்படலாம். அந்த இன அழிப்பு என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியதுக்கு பின்னர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னார் நீங்கள் அப்படி சொல்லுவதானால் நாம் அதை ஏற்றுக் கொள்ளுகின்றேம் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என சொல்லியிருந்தார்.

நான் சொல்லுவது என்னவென்றால் அவர்கள் அதை கொண்டுவந்திருக்க வேண்டும் அவர்கள்தான் தேசியவாதிகள். அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு சுமந்திரன் சொன்னார் எனக்கு இதில் உடன்பாடு இல்லை ஆனாலும் நான் ஏற்று கொள்ளுகின்றேன் என்று.

எனக்கு தெரியவில்லை கஜேந்திரகுமார் ஏற்றுக்கொள்வது அனைத்தையும் எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று ஆனால் அவ்வாறான நடவடிக்கை அனைத்தும் நடந்து முடிந்ததற்கு பிற்பாடு இதில் கையெழுத்து வைப்பதை ஒரு பிரச்சினையாக்கி, சிறுபிள்ளை தனமாக மாற்றினார்கள்.

இந்த தயாரிப்பில் பலபெருடைய பங்களிப்பு இருந்தது கட்சிகள் என்று பார்க்கும் போது தமிழரசுக் கட்சி மிக பழமையானது ஆயுதம் எடுத்து போராடிய கட்சிகளாக ஈ.பி.ஆர்.எல்.எப் இருக்கின்றது ரெலோ இருக்கின்றது, புளோட் இருக்கின்றது பல பேர் இதில் இனைந்து இருக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் யாரும் கையெழுத்து வைக்க கூடாது நேற்று வந்தவர்கள் கையெழுத்து வைக்கலாம் இது எவ்வளவு தூரம் சரியான விடயம் என எனக்கு புரியவில்லை. விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும், சுமந்திரனும் ஏற்றுக்கொண்டார்களாம் இதை சரியென எடுத்துக் கொள்ளுவோம் இதை மாற்றுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது.

அனைவரும் கையெழுத்து வைக்கும் போது அந்த அறிக்கைக்கான கனதி கூடும் ஆனால் கையெழுத்து வைக்க முடியாது என கூறிவிட்டார்கள். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான ஒரு விடையம்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து சிவில் அமைப்புக்களின் கையெழுத்தை வேண்ட முடியுமாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய கட்சி தலைவர்களுடைய கையெழுத்தை வாங்குவதில் என்ன சிக்கல் இருக்கின்றது.

நடைபெற்ற கூட்டத்தின் அழைப்பு கூட சரியான முறையில் அனுப்புப்பட்டதாக நான் அறியவில்லை.

இந்த ஆவணம் வருவதற்கு முன்பாக விக்னேஸ்வரன் தலைமையில் நான், சிறிக்காந்தா, அனந்தி கூடி நாங்கள் ஒரு ஆவணத்தை தயார் செய்து இருந்தோம்.அந்த ஆவணத்தில் நாங்கள் மிக முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்தாருந்தோம்.

நாங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என குறிப்பிட்டாருந்தோம் அதை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கூறிவிட்டார்கள். ஏன் எனில் நாங்கள் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க கூடாது என்பது சுமந்திரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் இருந்த கருத்தாக இருந்தது ஆகவே நாங்கள் அதனை கைவிட வேண்டிய தேவை வந்தது கைவிட்டோம்.

ஆகவே நாங்கள் தயாரித்த அறிக்கை அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் இது எல்லாம் அவர்களுக்கு கிடைத்ததன் பிற்பாடு அவர்கள் தயாரித்த அறிக்கை என்பது இனுப்படுகொலை இல்லை என்ன ஒன்றை காட்டித்தான் அவர்கள் கொண்டுவந்தார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker