ஆலையடிவேம்பு

சரிகமப சபேசன் அவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச கௌரவிப்பு விழா தொடர்பான கலந்துரையாடல்.

சரிகமப புகழ் சபேசன் அவர்களுக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் 11.01.2026 ஆம் திகதி பிற்பகல் 03.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு ஆலையடிவேம்பு பிரதேச சமூக அமைப்புக்கள் இணைந்து நடாத்த ஆலோசிக்கப்பட்டு.

அதனை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (06) மாலை 4.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் சமூக அமைப்புக்கள் ஆலயங்கள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் போன்றவர்கள் கலந்து தங்களது ஆதரவு மற்றும் குறித்த நிகழ்வை எவ்வாறு சிறப்பாக முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக சந்திவரை வாகன பவனியாக அழைத்துவரப்பட்டு பேண்ட் இசை வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு கோலாகலமாக இடம்பெற தீர்மானிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளலாம் மேலும் சமூக அமைப்புக்கள் ஆலயங்கள் விளையாட்டு கழகங்கள் சமூக ஆர்வலர்கள் நலன்விரும்பிகள் தங்கள் வாழ்த்துக்களையும் நினைவு பொருட்களையும் வழங்கி கௌரவப்படுத்துவதற்கான சாந்தப்பமும் வழங்கலாம் போன்ற பல விடயங்களும் தீர்மானிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker