இலங்கை
நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் விநாயகபுரம், விநாயகர் விளையாட்டு கழகம் சாம்பியனாக தெரிவாகியது….

ஜே.கே.யதுர்ஷன்
சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் 35 வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரில் 32 கழகங்கள் போட்டியிட்டன.
அதில் இறுதிப் போட்டிக்கு விநாயகபுரம் விநாயகர் கழகமும், திருக்கோவில் உதய சூரியன் கழகமும் தெரிவாகின.
இறுதிப் போட்டியிலே முதலில் துடுப்பெடுத்தாடிய விநாயகர் விளையாட்டுக்கழகம் 89 ஓட்டங்களைப் பெற்றது.
எதிர்த்தாடிய உதயசூரியன் கழகத்தினர் 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
12 ஓட்டங்களினால் விநாயகபுரம் விநாயகர் கழகம் சாம்பியனாக மகுடம் சூடியது.