ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இந்து இளைஞர் மன்றத்தினால் முகக்கவசம் அன்பளிப்பு இன்று….

வி.சுகிர்தகுமார்

இதற்கமைவாக இந்து இளைஞர் மன்றம் 800 முகக்கவசங்களையும் உதவிக்கல்விப்பணிப்பாளர் சு.சிறிதரனின் ஒத்துழைப்புடன் மு.சுரேஸ் எனும் டெயிலர் மூலமாக 300 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் தயாரித்து பொதுமக்களின் பாவனைக்காக இன்று வழங்கியுள்ளார்
இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாட்டின் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை பாராட்டுவதாக தெரிவித்த அக்கரைப்பற்று மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தினர் அதற்கு உறுதுணையாக செயற்படும் அமைச்சரவை, சுகாதாரத்துறையினர், பாதுகாப்பு துறையினர் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஊடகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இன்று அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா இல்லத்தில் வைத்து முகக்கவசங்களை சுகாதார துறையிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அம்பாரை மாவட்ட இந்து இளைஞர் மன்ற பேரவை தலைவர் த.கயிலாயபிள்ளை இவ்வாறு கூறினார்.

இந்து இளைஞர் மன்றத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை முகக்கவசங்கள் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.அகிலனிடம் இன்று மக்களின் தேவையின் நிமித்தம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் நாட்டில் உருவாகியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் பொது அமைப்புக்கள் வறுமையில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த வைத்தியர் எஸ்.அகிலன் முகக்கவசங்கள் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அதனை அணிவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பிலும் விளக்கினார். இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 37பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.