ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக குப்பைத்தொட்டிகள் வழங்கிவைப்பு….

-அபிராஜ், கிஷோர்-
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் பிரதேச மத ஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு திண்மக்கழிவகற்றல் செயற்பாட்டினை முறையான முறையில் முகாமைத்துவம் செய்யவும், சுற்றுச்சூழல் மாசற்ற முறையில் பேணும் முகமாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் தங்கையா கிரோஜாதரன் அவர்களின் தலைமையில் குப்பைத்தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளுடன் சிறந்த முறையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை பிரிவில் காணப்படும் மத ஸ்தலங்கள் – 28, பாடசாலைகள் -12 மற்றும் வைத்தியசாலை -02 ஆகியவற்றிற்கு குப்பைத்தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.