மாற்றத்திற்கு பின்னரான அவுஸ்ரேலியா அணிக்கெதிரான விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிரடி தலைமை மாற்றங்களுக்கு பின்னர், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், எதிர்வரும் அவுஸ்ரேலியா அணியுடனான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடரை, கருத்திற் கொண்டு ரி-20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைமைகள் மாற்றப்பட்டன.
இதற்கமைய மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளினதும் அணித்தலைவராக செயற்பட்ட சப்ராஸ் அஹமட்டின், ரி-20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைமை பறிக்கப்பட்டு புதிய தலைவர்களாக டெஸ்ட் அணிக்கு அசார் அலியும், ரி-20 அணிக்கு பாபர் அசாமும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மாற்றத்திற்கு பின்னரான அவுஸ்ரேலியா அணியுடனான தொடரில் விளையாடும் வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரி-20 மற்றும் டெஸ்ட் அணிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அணித்தலைவரான சப்ராஸ் அஹமட் இத்தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர்களான மூசா கான் மற்றும் நசீம் ஷா ஆகியோர், இத்தொடரின் ஊடாக டெஸ்ட் அறிமுகத்தை பெறுகின்றனர்.
இதேபோல சகலதுறை வீரரான காஷிப் பாடீயும் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார். மேலும், அபிட் அலி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மத்திய தரவரிசை வீரரான இப்தீகார் அஹமட், மூன்றாண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அனுபவ வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இத்தொடரிலிருந்து விலக, வலதுக் கைது வேகப்பந்து வீச்சாளரான இம்ரான் கான் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதுதவிர இளம் வேகப்பந்து வீச்சாளரான சயீன் அப்ரிடி மற்றும் மொஹமட் அப்பாசும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
….
பாபர் அசாம் தலைமையிலான ரி-20 அணியில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 37 வயதான தற்போதைய கிரிக்கெட் உலகின் மிக உயரமான வீரரான மொஹம் இர்பான், மூன்றாண்டுகளுக்கு பிறகு ரி-20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மத்திய தரவரிசை வீரரான குஷ்டில் ஷா மற்றும் வலதுக் கை துடுப்பாட்ட வீரரான உஸ்மான் காதிர், முசா கான், ஆகியோரும், ரி-20 கிரிக்கெட்டில் அறிமுகம் பெறுகிறனர். சதாப் கானும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சரி தற்போது முதலாவதாக டெஸ்ட் அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
அசார் அலி தலைமையிலான அணியில் அபீட் அலி, அசாட் சபீக், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், இப்தீகார் அஹமட், காஷீப் பாடீ, மொஹமட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான், முசா கான், நாஷீம் ஷா, சயீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்னனர்.
அடுத்ததாக ரி-20 அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
பாபர் அசாம் தலைமையிலான அணியில் அசீப் அலி, பகர் சமான், ஹரிஸ் சொஹைல், இப்தீகார் அஹமட், இமாட் வசிம், இமாம் உல் ஹக், மொஹமட் ஆமிர், மொஹமட் ஹஸ்னெய்ன், மொஹமட் இர்பான், மொஹமட் இர்பான், முசா கான், உஸ்மான் காதிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்னனர்.
அடுத்த மாத ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி, அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில், முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, நவம்பர் 3ஆம் திகதி சிட்னியிலும், இரண்டாவது ரி-20 போட்டி நவம்பர் 5ஆம் திகதி கென்பெர்ரா மைதானத்திலும், மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி நவம்பர் 8ஆம் திகதி பெர்த்திலும் நடைபெறவுள்ளது.
அடுத்தாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 21ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.