இலங்கை
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு

பலாங்கொடை – சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.30 அளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தனது நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த இம்புல்பே பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தார்.
பலாங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.