விளையாட்டு
எஞ்சலோ மெத்திவ்ஸ் விடுத்துள்ள கோரிக்கை…

முன்னாள் இலங்கை அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மெத்திவ்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் நாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் வினவினோம்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவர், ´ சர்வதேச போட்டிகளில் தற்காலிகமாக தனது பெயரை சேர்க்க வேண்டாம்´ என மெத்திவ்ஸ் கேட்டுள்ளதாக கூறினார்.
34 வயதான மெத்திவ்ஸ் இலங்கைக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும் (6,236 ஓட்டங்கள்), 218 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் (5,635), 78 T20 போட்டிகளில் 1,148 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
அவர் தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியை 2008 இலும், முதல் டெஸ்ட் போட்டியை 2009 இலும் விளையாடியிருந்தார்.