அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் சிவில் சமுக மற்றும் தனியார் துறையினருக்கு விழிப்பு கருத்தரங்கு….

அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் ட்ரான்ஸ்பரன்சி ன்ரநெசனல் ஸ்ரீலங்கா (TISL) இன் நிதி உதவி மற்றும் வழிகாட்டல்களுடன் சுகாதாரத் துறையில் பொதுக் கொள்முதலைக் கண்காணித்தல், தடயங்களை கண்டறிதல் மற்றும் முறையிடல், அத்துடன் பாலின அடிப்படையிலான தாக்கங்களை பகுப்பாய்வு செய்வதோடு எந்தவித பாகுபாடுமின்றி ஈடுபடும் திறனை சிவில் சமுகம் மற்றும் தனியார் துறையினருக்கு வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (29) சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கு காலை 9.30 மணி தொடக்கம் 2.30 மணிவரை அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் அம்பாறை மாவட்ட நிறுவன இணையத்தின் திட்ட உத்தியோகத்தரான திரு.ம.லக்ஷ்மிகாந் ஒருங்கிணைப்பில் அம்பாறை மாவட்ட அரச சார்ப்பற்ற அமைப்புக்களின் இணைய பணிப்பாளர் திருமதி வாணி சைமன் தலைமையில் நாடாத்தப்பட்டது.
சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சமூகமட்ட தலைவர்கள் கருத்தரங்கில் கலந்து பயனடைந்ததுடன். ரான்ஸ்பரன்சி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கொழுப்பு தலைமை அலுவலக நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் ஜனாப் சறூக் வளவாளராக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.