ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனாவைரஸ் தொற்று நோயின் மாத்திரம் அதிகூடிய கவனம் இருப்பதால் கொடிய ஆட்கொல்லி டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய பாரிய அபாயநிலை!!! மக்களே அவதானம்….

தற்போது பெய்துவரும் பருவ மழையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றநிலையில் இதுதொடர்வாக மக்கள் கவனம் கொள்ளாமல் செயற்படுகின்றமை பாரியதாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியதாக அமையஇருக்கின்றது.

மேலும் நாட்டிலும் எமது பிரதேசத்திலும் தற்போது கொரோனா நோய் தொற்றானது பரவிவருகின்ற நிலையில் ஏன் நேற்றுக்கூட அட்டாளைச்சேனையில் 13பேரும் அக்கரைப்பற்றில் 6பேரும் ஆலையடிவேம்பில் 2பேரும் திருக்கோவில் மற்றும் கல்முனை தெற்கு ஆகியவற்றில் தலா ஒருவரும் இனம்காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் மற்றும் அதிகாரிகள் உடைய அதிகூடிய கவனம் சென்றுகொண்டு இருக்கின்றமையினால் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்வன எந்த நிலைப்படும் அற்றதாக காணப்படுவதற்கு காரணமாக அமைந்து இருக்கின்றது.

இவ்வாறு இருக்கின்ற போதிலும் மக்கள் டெங்கு நோய் தொடர்வாக கவனம் செலுத்துவது காலத்தின் இன்றிமையாது என்பதனையும் உணர்ந்து தங்கள் வீட்டு சுற்றுசூழலை வாரம் ஒருமுறையாவது டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு நம்மையும் நம்மைசேந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்வது நமது கடமையாக காணப்படுகின்றது என்பதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.

நுளம்பு இனப்பெருக்கம் செய்வதனைத் தடுப்பதற்கு இந்த வழிமுறைகளை  பின்பற்றலாம் 

– கிணறுகள்/சீமெந்து தாங்கிகள் மற்றும் நீர் சேகரிக்கும் கொள்கலன்களை வலைகள் மூலம் மூடி மறைக்கலாம்.

– கிணறு, குளம், தாங்கிகள், ஆகியவற்றில் குடம்பிகளை உண்ணும் மீன்களை வளர்த்தல்.

– குழாய்க்கிணற்றின் கழுத்துப்பகுதியில் நீர்தேங்கி நுளம்புகள் பெருகாதவாறு அவதானிக்கவும்.

– நீர்சேகரிக்கும் தாங்கிகள், மலர்சாடிகள், மற்றும் பறவை குளியல்கள் ஆகியவற்றை சரியான கால இடைவெளிகளில் கழுவி சுத்தப்படுத்தல்.

-குளிர்சாதனப்பெட்டி மற்றும் வாயு சீராக்கியில் நீர் சேகரிக்கும் மற்றும் செல்லப்பிராணிகள் உணவு உண்ணும் கோப்பைகளை சரியான கால இடைவெளிகளில் கழுவி சுத்தப்படுத்தல்.

-பாவிக்கமுடியாத / பாவனையற்ற மலசலகூட கொமட் மற்றும் சிஷ்டேன்களை அழித்துவிடல் அல்லது திருத்துதல்.

– அழித்தல் /ஒழுங்காக அகற்றுதல் அல்லது தேவையற்ற அகற்றப்பட்ட எல்லாப் பொருட்களையும் மீள்சூழற்சி செய்தல்.
-மூடி / துளைகள் / மீள் பயன் படுத்தக்க அல்லது அகற்றப்பட்ட டயர்களில் மண்போட்டு மூடுதல்.

– தொடர்ந்து சுத்தம் செய்யாத அல்லது பேணப்படாத அடைபட்ட கூரைப்பீலியை நீக்கி விடவும்.

-மூடுவதற்கு பயன் படுத்தப்படும் பொருட்கள் (பொலித்தீன் மற்றும் செயற்கை இறப்பர் தோல்) கொங்கிறீட் தளங்கள் நீர் கேசரிப்பு இல்லாமல் பராமரித்தல்.

– மரப்பொந்து மற்றும் மூங்கில் துளைகளில் மண் அல்லது சீமெந்து இட்டு நிரப்புதல்.

– நீர்சேர்க்கக்கூடிய அலங்கார தாவரங்களை நடுவதை தவிர்த்தல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker