ஆலையடிவேம்பு
கோளாவில் 02 ஐ சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை வயலில் சடலமாக மீட்பு!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகி கிராம சாம்பமாரி வயல் பகுதில் ஒருவரின் சடலம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் கோளாவில் 02 ஐ சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய அன்னக்குட்டி கோமலதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கண்ணகி கிராம சாம்பமாரி வயல் பகுதில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட வயல் காணியை வளப்படுத்துவதற்கு உளவு இயந்திரத்தில் சாம்பல் உமி எடுத்து சென்ற நிலையில் குறித்த வயல் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் அன்னாரின் பிரிவினால் சோகத்தில் காணப்படுகிறார்கள்.
மேலதிக செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்கிறார்கள்.


