கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் சித்திரப்புத்தாண்டு விழா – 2024

-ஹரிஷ்-
ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் அறநெறி மாணவர்களுக்கான சித்திரப்புத்தாண்டு விழா இன்று (28) காலை 8.00 மணியில் இருந்து 11.30 வரை கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சித்திரப்புத்தாண்டு விழாவில் அறநெறி மாணவர்களுக்கான பல கலாச்சர போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது. அந்தவகையில் மாலை கட்டுத்தல், யானைக்கு கண் வைத்தல், கோலம் போடுதல், நிறைகுடம் வைத்தல் , முட்டியுடைத்தல், கயிறு இழுத்தல், தேங்காய் திருவுதல் என பல போட்டி நிகழ்வுகளும் கலாச்சாரம் சார்ந்ததாக மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அதிதிகள், அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபை உறுப்பினர்கள், அறநெறி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.