கோளாவில் பெருநாவலர் வித்தியாலய தரம் 01, 02, 03 மாணவர்களின் சந்தை!

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கோளாவில் பெருநாவலர் கோளாவில் பெருநாவலர் வித்தியாலய மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடான மாணவர் மாதிரிச்சந்தை இன்று (09) காலை பாடசாலையில் நடைபெற்றது.
தரம் 01, 02 மற்றும் 03 ஆம் வகுப்பு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் அதிதியாக ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான கே.கமலமோகனதாசன் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர் (PHI) S.சுதாகரன் ஆகியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை கிராம மக்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
பாடசாலை மாணவர்களின் குறித்த செயற்பாடுகளுக்கு பாடசாலையின் அதிபர் S.மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூடுதல் ஆதரவை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.