Uncategorised
கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (01/10/2024) செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கோலாகலமாக பாடசாலையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக சிறுவர்களின் பல கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவையாளர் ஆறுமுகம் ஐயா அவர்களை கௌரவப்படுத்திய நிகழ்வு அதிபர் அவர்களாலும் மேலும் மாணவர்கள் அனைவருக்கும் அதிபர் ஆசிரியர்களால் மாலை அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.