கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தின் அதிபர் ஸ்ரீ.மணிவண்ணன் அவர்களின் தலைமையில் சிறுவர் தின மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கோலாகலமாக பாடசாலையில் இடம்பெற்றது.
“எல்லாவற்றிற்கும் மேலானவர்கள் சிறுவர்களே” எனும் தொனிப் பொருளின் கீழ் நடாத்தப்பட்ட நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய சமூகத்திற்கு செய்திகொடுப்பதற்காக சிறு ஊர்வலம் ஒன்று நடைபெற்றதுடன் அதனைத்தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பாடசாலை மேம்பாட்டு திட்டமிடல் இணைப்பாளர் மேகவண்ணன், சமூக சேவையாளர் கந்தன் சின்னக்குட்டி, முத்துமாரியம்மன் ஆலய முன்னாள் தலைவர் சிதம்பரம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வாமதேவன் என்பவர்களும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்தனர்.
இவ் நிகழ்வில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள், சமூக சேவையாளர் கந்தன் சின்னக்குட்டி ஐயா அவர்களை கௌரவப்படுத்திய நிகழ்வு, அதிதிகள் உரை மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.