ஆலையடிவேம்பு
கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தின் ”Kanthi Premier League – 2024” சமர் இன்று ஆரம்பம்!!!

கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகத்தின் 2024 Kanthi Premier League மென்பந்து கிரிக்கட் சமர் இன்று (31) காலை 09.30 மணியளவில் கோளாவில், தியாகப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் அணி வீரர்களின் போட்டிக்கான உறுதிமொழி எடுத்தலுடன் சிறப்பாக ஆரம்பமாகியது.
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு வீரர்களை நான்கு அணிகளாக கொண்டதாக 2024 ஆம் ஆண்டுக்கான KPL சமர் ஒழுங்கமைக்கப்பட்டு ஒற்றுமையான நேர்த்தியான முறையில் இடம்பெற்று வருகிறது.





