வரலாற்றில் சாதனை படைத்த பாடசாலை மாணவர்களுக்கு! ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னமுகத்துவாரம் திகோ / சென் ஜோண் வித்தியாலயம் அனைவறினாலும் புறக்கணிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் காணப்படும் இப்பாடசாலையில் இருந்து 2019 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்வன் ஜீ .அபினாஸ் (162) மற்றும் செல்வன் வி. நிதுஜன் (156) எனும் இரு மாணவர்கள் தோற்றி இரு மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்து தங்கள் பாடசாலைக்கு வரலாற்றில் சாதனை படைத்தனர் .
இவ் மாணவர்கள் மற்றும் அப்பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களையும் கற்றலில் ஊக்குவிக்கும் முகமாக திரு.ராஜேந்திரன்(கட்டார்) குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் இன்று (10) இணையக்குழு நிர்வாக உறுப்பினர்களினால் நேரில் சென்று வழங்கப்பட்டது.
திகோ / சென் ஜோண் வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவர் முன்னிலையில் இதேபோல் நீங்களும் இவ்வாறு அடுத்த வருடம் சித்தியடைந்து உங்கள் பாடசாலையினை உலகறியச்செய்து இதேபோல் பரிசினை நீங்களும் பெற்றுக்கொள்ளவேண்டும் என கூறி கற்றலுக்குத்தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளடங்கிய பொதி தரம் 05 புலமைப்பரிசில் பரிசையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் முன்னிலையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.