ஆலையடிவேம்பு
கோளாவில், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவத்தின் பால்குட பவனி….

ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 28.06.2023 அன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில்.
பால்குட பவனி நிகழ்வு பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (30.06.2023) காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து கோளாவில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு வருகைதந்து விசேட பூஜை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது.