இலங்கை
அரச ஊழியர்களின் எதிர்வரும் 21 ஆம் திகதி சம்பளம் வழங்க தீர்மானம்

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை மே 21 ஆம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டிற்குள் காணப்படும் தொற்று நோய் நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மே 24 மற்றும் 25 ஆம் திகதி விசேட அரச விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் தோறும் 10 ஆம் திகதிக்குள் வழங்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.