ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டின் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி….

அக்கரைப்பற்று, ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த (05.08.2023) அன்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு சுற்றுப்போட்டிகள் இடம்பெற்று வந்தது.
அந்த வகையில் இறுதிப்போட்டி நிகழ்வு நேற்றய தினம் (13) மாலை 3.30 மணியளவில் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் புனிதராஜ் அவர்கள் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வின், பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.பபாகரன் அவர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக கழகத்தின் மூத்த உறுப்பினர்களான புண்ணியமூர்த்தி, காமினி ,டட்லி ஆகியவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதிப்போட்டியிலே ஒலுவில், Oluvil Eleven Star Sports Club மற்றும் பள்ளிக்குடியிருப்பு, Raheemiya அணிகள் பலப்பரீட்சை நடத்தியதில் ஒலுவில் ELEVEN STARS விளையாட்டுக்கழகத்தினர் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி கிண்ணத்தினை தமது வசமாக்கிதோடு பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்தையும் 50,000/- ரொக்கப் பரிசினையும் தட்டிச்சென்றனர்.
மேலும் இரண்டாம் இடத்தினை பெற்ற Raheemiya விளையாட்டு கழகத்தினருக்கு RUNNERS-UP வெற்றிக்கிண்ணமும் 30,000/- பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.