இலங்கை
Trending

கொவிட் மரணங்கள் தொடர்பில் சுகாதார பிரிவு வௌியிட்ட தகவல்

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார்.

“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கு வேண்டும். இலங்கையில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்”

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker