இலங்கை
கொரோனா வைரஸ்: பாரிஸில் நாழி முதல் மதுக்கடைகளை மூடத் திட்டம்

நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து பாரிஸில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மதுபானக் கடைகளையும் முழுமையாக மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மதுபானக் கடைகள், ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் சுகாதார விதிகளுடன் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் உணவகங்களை திறந்து வைக்க முடியும் என்றும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 12,565 ஆக அதிகரித்துள்ளன.
ஒரு வட்டாரத்தில் தொற்று விகிதம் 100,000 பேருக்கு 250 பேர் என்ற அடிப்படையில்உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.