புதிய அரசியலமைப்பிற்காக மாற்று முன்மொழிவுகளை வழங்கியது மஹா சங்கம்!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பிற்காக முன்வைக்கப்பட்ட மாற்று முன்மொழிவுகள் உள்ளடங்கிய நூல் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பௌத்த சாசன செயலணி மற்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மஹா சங்கத்தினரால் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இந்நூல் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத்தின், தேசியக் கொள்கை திட்டமிடல் குழு, சட்டம், அரச நிர்வாகம், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கொள்கை துணைக் குழுவினால் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
குறித்த துணைக்குழுவில், வஜிரா ராமாவாசி ஞானசீஹ தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பிரனாந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் டி அல்விஸ், ஜனாதிபதி சட்டத்தரணி வைத்யரத்ன, கலாநிதி பாலித கோஹொன, பேராசிரியர் லலிதசிறி குணருவண், ரஞ்சித் தென்னகோன், கலாநிதி நிமல் ஹெட்டிஆராச்சி, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.