2021 வருட நவராத்திரிவிழா விஜயதசமி பூசை நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தில் இன்று….

இந்துக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களுள் நவராத்திரி விரதம் முக்கியமானதாகும். சக்தியை நோக்கி 9தினங்கள் விரதமிருந்து அனுஸ்டிக்கும் மகத்தானவிரதம். இவ்விரதம் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09 தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு இன்றைய தினம் விஜயதசமி பூசை நிகழ்வு பல பாகங்களில் இடம்பெற்றது.
அந்த வகையில் நவராத்திரிவிழாவின் இறுதிநாள் விஜயதசமி பூசை வழிபாடு நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய தினம் (15.10.2021) மாலை வேளையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் ஐயா அவர்களின் தலைமையின் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்களிப்புடன் சிறப்பானதாக இடம்பெற்றது.
குறித்த பூசை நிகழ்வில் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவினரும் கலந்து கொண்டதுடன் மேலும் குறித்த பூஜை வழிபாடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.