இலங்கை

முதல் முறையாக யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு!!

அமெரிக்காவின் யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் முதல் முறையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூரான காணொளி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமது கல்வி நிறுவனம் செய்த முறைப்பாடு மற்றும் சட்டத்தரணி ஊடான கடிதத்தை கவனத்தில் கொள்ளாது யூடியூப் நிறுவனம் இந்த அவதூரான காணொளியை நீக்காததை காரணமாக கொண்டு, இலங்கையின் கல்வி நிறுவனம் யூடியூப் எல்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளான கொழும்பு டுடே என்ற பெயரில் யூடியூப் வலையொளியை நடத்தும் கீர்த்தி துனுவில, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் யூடியூப் நிறுவனம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி கே.கே.லியனகே, குறித்த அவதூறு காணொளி தொடர்ந்தும் ஒளிப்பரப்படுவதற்கு தடைவிதித்து கொழும்பு டுடே நிறுவனத்தின் கீர்த்தி துனுவில மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு தடையுத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்.

யூடியூப் நிறுவனம் வணிக ரீதியான நன்மையை பெற்றுக்கொள்ள உண்மை மற்றும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாது யூடியூப் வலையொளி தளத்தை உருவாக்க வசதிகளை வழங்குவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ள முறைப்பாட்டாளர்,

கொழும்பு டுடே என்று பெயரில் ரகசியமாக இயங்கும் யூடியூப் வலையொளியில் வெளியிடப்பட்ட அவதூறான காணொளி இந்த வழக்குக்கு ஏதுவாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

உண்மையான நபர்களின் அடையாளம் இன்றி, உரிய விமானம் இன்றி, யூடியூப் வலையொளி தளத்தை ஆரம்பிக்க அந்த நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வலையொளி தனத்தை பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள விலாசம் உண்மையான விலாசம் அல்ல எனவும் அது லண்டனில் உள்ள களியாட்டம் நடத்தும் இடம் ஒன்றின் விலாசம் எனவும் கூறியுள்ள முறைப்பாட்டாளர்,

குறித்த அவதூறு காணொளியை நீக்குமாறு விடுத்த கோரிக்கையை யூடியூப் நிறுவனம் மறுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அந்த அவதூறான காணொளியில் ஆர்.ஈ.ஜி என்ற கல்வி நிறுவனம் மாணவர்களிடம் பண மோசடி செய்யும்.

மோசடியாளர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் பெரிய அவமானத்திற்கு உள்ளானதாகவும் முறைப்பாட்டாளர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker