உலகம்
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி – இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! டென்மார்க் அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க டென்மார்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வேக்சின் பாஸ்பார்ட் நடைமுறை இனி இல்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் பொது முடக்கம், இரவு நேர ஊரடங்கு, பார், கேளிக்கை பூங்கா உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே மூடுமாறு விதிக்கப்பட்ட உத்தரவு இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மூலம் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார்.