இலங்கை
உயர்தர மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்

உயர்தரப்பரீட்சையில் பொதுச் சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பொதுச் சாதாரண பரீட்சையில் தோற்றுவித்து குறித்த பாடத்தில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றவர்கள் மீண்டும் அப்பரீட்சையில் தோற்ற வேண்டிய அவசியம் இல்லை என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அடுத்த பல்கலைகழக விண்ணப்பத்திற்கு அந்த புள்ளி போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.