கொரோனாவுக்கு மத்தியில் தமிழகத்தில் பரபரப்பாக இடம்பெறும் சட்டமன்றத் தேர்தல்

கொரோனாவுக்கு மத்தியில் இந்திய – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமல்ஹாசன், மு.க ஸ்டாலின் உள்ளிட்ட வேட்பாளர்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார்.
திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு . க ஸ்டாலின் தோனாம்பேட்டையில் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, தமிழக மக்களும் நடைபெறும் வாக்குபதிவில் தமது வாக்குகளை உத்வேகத்துடன் அளித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.